• நிகோஜ் பள்ளங்கள்: பாறையில் இயற்கை செதுக்கிய ஆழங்கள்

    மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டம், பார்னேர் தாலுக்காவில் குகடி நதிக்கரையில் நிகோஜ் கிராமம் அமைந்துள்ளது. இது புனேயிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மக்களால் பெரிதாக அறியப்படாத இந்த கிராமம், இந்திய புவியியலின் ஒரு முக்கிய இயற்கைச் சிற்பக்கூடமாக திகழ்கிறது. குகடி நதியின் கரைகள் எரிமலைப்பாறையால் ஆனவை. ஆற்றின் இரு கரைகளிலும், பாறைகளின் மேல் வியத்தகு வட்ட வடிவ பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை, இயற்கையின் பொறுமையுடனும், தொடர்ச்சியான செயலாற்றலுடனும் நிகழ்ந்த நுண்ணிய வேலைப்பாடுகளால் உருவானவை. இந்த பள்ளங்கள்

    Continue Reading →

  • புதிய உயிரின் புதிர்: உயிரா? உயிரில்லையா?

    நாம் ஒருவர் அல்லது ஒரு தாவரமோ அல்லது விலங்கோ உயிருள்ளதா என்று எப்போது சொல்கிறோம்? அது தானாக வளர வேண்டும், பெருக வேண்டும், தன் சக்தியைத் தானே உருவாக்க வேண்டும். இதுவே உயிரியலில் உயிரின் அடிப்படை வரையறையாக உள்ளது. ஆனால் இயற்கை எப்போதும் இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. வைரஸ்கள், உதாரணமாக, மேலே பட்டியலில் உள்ள எந்த செயலையும் தன்னால் செய்ய முடியாமல், ஓம்புயிரியின்(host) உதவியால் மட்டுமே செயல்பட முடியும் என்பதனால், பெரும்பாலும் “உயிரில்லாதவை” என்று வகைப்படுத்தப்படுகின்றன.

    Continue Reading →

  • மனிதன் எப்படி நேராக நின்றான்? – இடுப்பெலும்பின் சிறிய மாற்றங்கள் பெரிய புரட்சி

    ஒரு குழந்தை முதன்முதலாக நடக்கத் தொடங்கும் காட்சியை யாரும் மறக்க முடியாது. முதலில் தடுமாறி இரண்டு அடிகள் போடும்; பின்னர் மெதுவாக நிமிர்ந்து நின்று சீராகச் செல்வது தொடங்கும். அந்தச் சிறிய நிகழ்வு மனித பரிணாம வரலாற்றின் மிகப்பெரிய சாதனையை நினைவூட்டுகிறது. இன்று நாம் இயல்பாகச் செய்கிற “நேராக நின்று இரண்டு கால்களில் நடப்பது” என்ற திறன், கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுத்த பரிணாமப் பயணத்தின் பலன். அண்மையில் வெளிவந்த ஒரு சர்வதேச ஆய்வு, இந்த திறனின் பின்னால்

    Continue Reading →